Friday, December 3, 2010

போபால் விஷ வாயு சம்பவம் ,26 ம் ஆண்டு ..

டிசம்பர் 3 போபால் விஷ வாயு சம்பவம் நடந்த தினம் , 26 வருடங்கள் ஆகின்றன இன்னும் நீதி கிடைத்த பாடில்லை , 
கடந்த வருடம் இதே குளிர் காலத்தில் ( அங்கு)  25 ம் ஆண்டு நினைவு தின சிறப்பு நிகழ்ச்சிக்க சென்றிருந்தேன் , மக்கள்  போரட்டங்களும் , ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும்  நடத்தி கொண்டிருந்தினர்,அந்த துயரம் அவர்கள் மனதில் இருந்து இன்னும் அழியவில்லை ,அழியவும் வாய்ப்பில்லை,எப்போது நீதி கிடைக்கும் என்று அவர்களின் ஆதங்கத்தை என்னால் உணர முடிந்தது , இன்னும் அந்த தொழிற்ச்சாலையை பாதுகாத்து கொண்டிருகிறார்கள் , அதை இடித்துவிட்டு அங்கு ஏதேனும் பயனுள்ள ஏதேனும் செய்தல் மக்களது மன நிலையாவது  மாறும் , 
 வழக்கம் போல இந்த வருடமும் அதேபோல , தொலைக்கட்சிகள் வழக்கம் போல அதே நிகழ்சிகள் ,50 வது நினைவு தினம் வரை  இதே சூழ்நிலை நிகழலாம் ..