Wednesday, July 13, 2011

பொறியியல் படிப்புணா என்ன ..

இப்பலாம் +2 முடிச்சா அடுத்து Engineering தான், அது +3 மாதிரி ஆயிடுச்சு, எல்லாரும் பொறியியல் பத்தி என்னதான் நெனச்சிட்டு இருகங்கன்னு தெரியல, எதோ பொறியியல் படிப்பு முடிச்சா IT கம்பெனில 40 ஆயிரம் சம்பளம் கெடைக்கும்னு நெனைகுறாங்க, அதெல்லாம் கேடயதுங்க , பொறியியல் படிப்புல பல பிரிவு இருக்கு, அது எல்லாம் எத்தன பேருக்கு தெரியும்னு தெரியல ,eg chemical eng, printing tech, textile eng, இப்படி பல பிரிவு இருக்கு, 
ஒரு நாடு முன்னேரனும்னாஎல்லா துறையிலும் கவனம் செலுத்தணும் , அத விட்டுட்டு mechanical eng படிச்சுட்டு TCS la  வேலைக்கு போன அதுல என்ன அர்த்தம இருக்கு,  மாணவர்களை குற்றம் சொல்ல முடியாது , அவர்களுக்கு தேவை நல்ல வேலை, ஆனால் எதிர்காலத்தில் இந்த கலாச்சாரம் மாற வேண்டும் , 

ஒவ்வொரு வருடமும் Engineering Admission   சமயத்துல பலபேரு என்னிடம் வந்து எந்த பொறியியல் கல்லூரியில் என் பிள்ளையை சேர்க்கலாம் என்று ஆலோசனை கேட்பார்கள், நான் கேட்கும் முதல் வார்த்தையே இதுதான் , உங்க பையன்கிட்ட அவனோட விருப்பதை கேட்டிங்கலன்னு , ஆனால் நான் பார்த்து நிறையபேர் ஒரு சமுதாய அந்தஸ்துக்காக மட்டும் பொறியியல் படிக்க வைக்குறாங்க, 
தயவுசெஞ்சு பசங்கள அவங்க விருப்பத்துக்கு சம்பந்தமான படிப்புல சேருங்க , அப்பதான் அவங்க எதிர்காலம் நல்லா இருக்கும் , +2  முடிச்சுட்டு படிக்க நெறைய பிரிவு இருக்கு , refer this book - cool carriers for Dummies .

Friday, July 1, 2011

என்ட கேரளம் ...

என் வாழ்கையில் கேரளா இவ்வளவு முக்கியத்துவம் பெறும் என்று நினைததேயில்லை, சின்ன வயசில் கேரளா என்றால் முழுவதுமாக மலையால் சூழப்பட்ட பச்சை பசேல் என்ற நினைத்துக்கொண்டு இருந்தேன் , என் முதல் பயணம் 7th படிக்கும்போது மலம்புழா அணைக்குசென்றது, அப்போதே கேரளத்தின் மீது ஈர்ப்பு தொடங்கிவிட்டது, அதற்கு பிறகு கல்லுரி வரை தமிழாக்கத்தை விட்டு வெளியே போகும் வாய்ப்பு இல்லை,ஒரே ஒரு முறை மட்டும் திருப்பதி சென்றிருக்கிறேன்.
    அதற்கு பிறகு கல்லுரி வாழ்க்கை பசுமையாக சென்றது ( அதை பற்றி எழுத நிறைய இருக்கிறது ).. 3rd year படிக்குபோது மூணாறு, வயநாடு சுற்றுலா சென்றோம், சொல்லவே வேண்டம் ஈர்ப்பு இன்னும் அதிகமாகியது , அப்போது கல்லூரியில் எதிரில் இருக்கும் கேரளா மெஸ்ஸில்தான் சாப்புடுவேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .. அப்படியான எனது கேரளா ஈர்ப்பு கேரளவிற்கே இழுத்து சென்றது ...........

Friday, December 3, 2010

போபால் விஷ வாயு சம்பவம் ,26 ம் ஆண்டு ..

டிசம்பர் 3 போபால் விஷ வாயு சம்பவம் நடந்த தினம் , 26 வருடங்கள் ஆகின்றன இன்னும் நீதி கிடைத்த பாடில்லை , 
கடந்த வருடம் இதே குளிர் காலத்தில் ( அங்கு)  25 ம் ஆண்டு நினைவு தின சிறப்பு நிகழ்ச்சிக்க சென்றிருந்தேன் , மக்கள்  போரட்டங்களும் , ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும்  நடத்தி கொண்டிருந்தினர்,அந்த துயரம் அவர்கள் மனதில் இருந்து இன்னும் அழியவில்லை ,அழியவும் வாய்ப்பில்லை,எப்போது நீதி கிடைக்கும் என்று அவர்களின் ஆதங்கத்தை என்னால் உணர முடிந்தது , இன்னும் அந்த தொழிற்ச்சாலையை பாதுகாத்து கொண்டிருகிறார்கள் , அதை இடித்துவிட்டு அங்கு ஏதேனும் பயனுள்ள ஏதேனும் செய்தல் மக்களது மன நிலையாவது  மாறும் , 
 வழக்கம் போல இந்த வருடமும் அதேபோல , தொலைக்கட்சிகள் வழக்கம் போல அதே நிகழ்சிகள் ,50 வது நினைவு தினம் வரை  இதே சூழ்நிலை நிகழலாம் ..