என் வாழ்கையில் கேரளா இவ்வளவு முக்கியத்துவம் பெறும் என்று நினைததேயில்லை, சின்ன வயசில் கேரளா என்றால் முழுவதுமாக மலையால் சூழப்பட்ட பச்சை பசேல் என்ற நினைத்துக்கொண்டு இருந்தேன் , என் முதல் பயணம் 7th படிக்கும்போது மலம்புழா அணைக்குசென்றது, அப்போதே கேரளத்தின் மீது ஈர்ப்பு தொடங்கிவிட்டது, அதற்கு பிறகு கல்லுரி வரை தமிழாக்கத்தை விட்டு வெளியே போகும் வாய்ப்பு இல்லை,ஒரே ஒரு முறை மட்டும் திருப்பதி சென்றிருக்கிறேன்.
அதற்கு பிறகு கல்லுரி வாழ்க்கை பசுமையாக சென்றது ( அதை பற்றி எழுத நிறைய இருக்கிறது ).. 3rd year படிக்குபோது மூணாறு, வயநாடு சுற்றுலா சென்றோம், சொல்லவே வேண்டம் ஈர்ப்பு இன்னும் அதிகமாகியது , அப்போது கல்லூரியில் எதிரில் இருக்கும் கேரளா மெஸ்ஸில்தான் சாப்புடுவேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .. அப்படியான எனது கேரளா ஈர்ப்பு கேரளவிற்கே இழுத்து சென்றது ...........
No comments:
Post a Comment